ஆயுர்வேதம்-ஆயுர்+வேதம்
ஆயுர் என்றால் உயிர்
வேதம் என்றால்அறிவியல்
ஆயுர்வேதம் என்றால் உயிர் அறிவியல், வாழ்வு மேம்பட கடைபிடிக்கவேண்டிய முறைகள் என்றும் சொல்லலாம். வாழ்வின் வளத்தை கூட்ட கூடிய ஒரு தரமான, பழமையான,இந்திய பழக்கவழக்கங்கள் நிறைந்த , இயற்கை மூலிகைகளை கொண்டு , பக்கவிளைவுகளற்ற , தொன்மையான, அறுவை சிகிச்சை நிறைந்த மருத்துவம் .
"காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்."
என்னும் திருவள்ளுவரின் வாழ்மொழிகேற்ப , ஆயுர்வேதம் மருத்துவம் நோயை குணப்படுத்த நெடுநாள் ஆயினும் நோயை முழுமையாக நீக்கிவிடும் .
பிற மருத்துவ முறைகளை போல ஆயுர்வேதத்திலும், நமது உடல் அங்கங்களில் ஏற்படும் நோய் தாக்குதலை குணப்படுத்த சிறப்பு பிரிவுகள் உள்ளன. இந்த மருத்துவம் எட்டு பெரும் அங்கங்களைக் கொண்டு காலத்தால் தலை நிமிர்ந்து நிற்கிறது . அவை அஷ்ட அங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இம்மருத்துவம் உலகத்தில் உள்ள பல மருத்துவங்களில் இல்லாத தனி சிறப்பை கொண்டுள்ளது. குறிப்பாக அறுவை சிகிச்சை, குழந்தை நல பிரிவு , ஆண்மை தன்மை கூட்டுதல் ஆகிய பிரிவுகள் இதில் அடங்கும்.
அஷ்ட அங்கங்கள்
காய சிகிச்சை ( General Medicine )
காய சிகிச்சை என்பது குறைபாடு உள்ள அல்லது சீரற்ற உறுமாற்றும் மூலம் எழும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையாகும் மேலும் உணவு பழக்கவழக்கங்களால் ஏற்படும் அபாயங்களையும் இப்பிரிவினால் தீர்கலாம்.
பால சிகிச்சை (Pediatrics)
கருவில் குழந்தை உருவாக ஆரம்பித்தத்திலிருந்து தாய்க்கும் சேய்க்கும் உருவாக கூடிய நோய்களையும்; மழலை, குழந்தை, விடலை ,வாலிப பருவங்கலில் ஏற்படக்கூடிய குறைபாடுகளையும் , தாய் பால் அதிகரிப்பால் ஏற்படும் உபாதைகளும், மாதவிலக்கு குறைபாடுகளையும் தீர்க்கும் சிகிச்சை பிரிவு ஆகும் .
கிரக சிகிச்சை (Psychology)
மன நோய் மன அழுத்தம் மன சம்மந்தப்பட்ட இடற்பாடுகளையும் மற்றும் உபாதைகளையும் தீர்க்கும் சிகிச்சை பிரிவு ஆகும்.
சாளாக்கியா சிகிச்சை (ENT (Ear-Nose-Throat)
கழுத்துக்கு மேற்பட்ட பகுதிகலான காது, மூக்கு, கண், தொண்டை, வாய், ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் பிரிவு ஆகும்.
சல்ய சிகிச்சை (Surgery)
கீறல் , கையாளுதளால் ஏற்படுகின்ற காயங்கள் மற்றும் உடல் கோளாறுகள் அனைத்தையும் சிகிச்சை கருவிகள் , இயந்திரங்கள் மூலம் சிகிச்சித்து உடலை மேம்படுத்தும் முறை .
அகடதந்தர சிகிச்சை (Toxicology )
விஷ பூச்சிகளில் பாம்பு ,எலி கடிகளின் மூலம் ஏற்படும் அபாயங்களை அறிந்து தக்க முறையில் சிகிச்சை தரும் பிரிவு .
ரசாயனதந்தர சிகிச்சை (Rejuvenative therapy )
உடம்பில் இருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நியாபகச் சத்தியை அதிகரிக்கவும், வாழ்க்கை முறைகளை விளக்குவது மட்டுமின்றி ஆயுள் அதிகரிக்கவும் இப்பிறிவு உதவுகின்றது.
வஜீகாரதந்தர சிகிச்சை (Reproductive Medicine )
ஆண்மை தன்மையை அதிகரிக்கவும் , மூலம் , ஆண்மை குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் தீர்க்கும் பிரிவு .
இந்திய வம்சாவலியை சேர்ந்த நாம் இந்திய மருத்துவமான ஆயுர்வேதத்தை பயன்படுத்துவோம் !!. நம் ரத்தத்தில் ஊறிக்கொண்டிருக்கும் நம் நாகரிக மருத்துவத்தை போற்ற தொடங்குவோம் , நாட்டை வளப்டுத்துவோம் .!!!!
என்ன இருக்கிறது அன்னியர் இடத்தில் ???
எல்லாம் உண்டு நம்மிடத்தில் !!!!
வயம்