நானும் டாக்டர் எஸ்.சுவாமிநாதன் சாரும் (ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - தினமணி, மெகா டிவி) ஒரு உணவகத்தில் South Indian ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது உணவு பரிமாருபவர் ஒரு வாழைப்பழத்தை கொண்டு வந்து வைத்தார். அது கிட்டத்தட்ட வாழைக்காய் என்றே கூறலாம். சார், இந்தப் பழம் இன்னும் சரியா கனியல, வேற பழம் கேட்கலாம் என்றதும் வேண்டாம், வேண்டாம். சர்வருக்கும் ஆயுர்வேதம் தெரிஞ்சிருக்கு. தக்ரேண கதளீ விருத்தம் (மோர் சாதம் சாப்பிட்டதும் உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது)ங்கறத தெரிஞ்சுதான் இந்த வாழைப்பழத்த கொடுத்து இப்ப சாப்பிடவேண்டாம், கனிய வெச்சு 4 நாளைக்கு அப்பறமா சாப்பிடுங்க னு சொல்லாம சொல்லிருக்கார்னு ஒரு 'வாழைப்பழ கதையா' ஆயுர்வேதத்தை சொல்லி தந்தார்.
- எஸ்.தியாகராஜன்
0 comments:
Post a Comment