பண்டைக்காலத்தில் மக்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை, நோயற்ற
வாழ்வை வாழ வழி காட்டியது. ஆனால் இன்றோ எல்லாம் எதிர்மாறாக உள்ளது. இதற்கான
காரணம் நமது வாழ்க்கை முறையும், உணவு பழக்கங்களும் தான். அந்த சிறப்பான
வாழ்க்கைமுறையைத்தான் நமக்கு ஆயுர்வேதம் கற்றுத்தருகிறது. ஆயுர்வேதம் என்பதே வாழ்க்கை முறையாகும். நாம் தான் அதை சிகிச்சை முறை
என்று கூறுகிறோம். ஏனென்றால் காலத்தின் குழப்பத்தாலும் கட்டாயத்தாலும்
செயல்களை முன்னுக்குப்பின் முரணாக செய்யவேண்டியதாயிற்று.
'எண்ணை தேச்சுக்கோடா தேச்சுக்கோடா' என்று கூறிய தலைமுறை குறைந்து,
கொட்டிய முடியை மீண்டும் நட்டுக்கொல்கிற தலைமுறை உருவாகியுள்ளது.
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி" என்று
கேட்டுக்கொண்டிருந்த அந்த காலம் அழிந்து, "உங்க பேஸ்ட்ல உப்பிருக்கா
க்ராம்பிருக்கா" என்றெல்லாம் கேட்பது நம் தலைவிதியே.
ஆயுர்வேதம் ஒரு சிகிச்சை முறை என்பதைவிட நடைமுறை என்பதுதான் உண்மை.
இதில் தினசர்யா (தினசரி நடைமுறை), ரிதுசர்யா (காலத்துக்கேற்ற நடைமுறை)
ஆகியனதான் பிரதானமாக அனுசரிக்கப்படுகிறது. சிகிச்சை முறைகளும் மருந்துகளும்
இரண்டாம் பட்சம் தான்.
இந்த காலகட்டத்திலாவது நாம் நம் நாட்டின் முன்னோர்கள் வாழ்ந்த முறையை
பின்பற்றமாட்டோமா என்று மனது தவிக்கிறது. அதை எப்படி எங்கே யாரிடம்
கற்றுக்கொள்வது என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. இதையெல்லாம்
வெளிப்படுத்துவதற்கு எடுத்த சிறு முயற்சிதான் 'வயம் ஆயுர்வேதா'. இங்கு
ஆயுர்வேத நூல்களில் கூறியுள்ள எளிய முறைகளை பின்பற்றக்கூடிய விதத்தில் கூற
உள்ளோம்.
தொடர்ந்து படியுங்கள்...
0 comments:
Post a Comment